1. தேனியில் கொட்டித்தீர்த்த கனமழையால் - வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு

 

2. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

 

3. நெல்லை மாநகரில் 110 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற 12 திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

4. நெல்லையில் பதிவு பெறாத மருத்துவம் பயிலாத போலி டாக்டர்கள், மருத்துவமனைகள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் 9444982683, 8667232018, 9840509959 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்  என அறிவிப்பு

 

5. அய்யலூர்,  கடவூர் வனப்பகுதியில் தேவாங்குகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக 3 மாதத்திற்குள் அறிவிக்க வனத்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

6. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க கோரிய வழக்க்கு ஜனவரி 5ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

 

7. காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும், ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடல் இன்று மறு உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது

 

8. கேரள மாநிலம் ஆரியங்காவு ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு சரி செய்யப்பட்டதால் ரயில் போக்குவரத்து வழக்கம்போல இயங்க தொடங்கியது. நேற்று (07.12.2021) சென்னையில் இருந்து புறப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) வழக்கம் போல கொல்லம் வரை இயக்கப்படும். திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16791/16792) ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படும்.

 

9. சட்டப்பேரவையில் அறிவித்தபடி சிவகங்கையில் வேளாண் கல்லூரி அமைக்க கோரி வரும் டிசம்பர் 11ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த சிவகங்கை நகர வணிகர் சங்கத்தினர் முடிவு

 

10. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் விமானம் மூலம் மதுரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக தொடண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.