தேனி மாவட்டம் கூடலூர் 12ஆவது வார்டு ஜக்கனநாயக்கர் தெருவை சேர்ந்த விவசாயி வீருசி (48). இவருடைய மனைவி முத்துலட்சுமி (38). இவர்களுக்கு  2 மகன்கள் உள்ளனர். இதில் சுபாஷ் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2 ஆவது மகன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பெருமாள் கோவில்புலம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மொச்சை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளனர்.



 

இந்த நிலையில் மொச்சை பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வீருசிக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மனைவி முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனால் அன்று அவர்கள் 2 பேரும் மாலை வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூவேஸ், மொச்சை சாகுபடி செய்திருந்த நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பூச்சி மருந்து அடிக்கும் பம்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மட்டும் இருந்தது. வீருசிக்கையும், முத்துலட்சுமியையும் காணவில்லை. 



 

இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் மூவேஸ் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலிசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் நேற்று கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 2 பேர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலிசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வீருசிக்கும், முத்துலட்சுமியும் விஷம் குடித்து இறந்துகிடந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மூவேசை அழைத்து வந்து போலீசார் காண்பித்தனர். இதில் இறந்து கிடப்பது தனது பெற்றோர் தான் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

 


 



 

இதையடுத்து கணவன், மனைவி இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.