எடப்பாடி அண்ணன் ஓகே சொன்னால் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயார் என  பெரியகுளத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.


தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.


தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தேனி மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் கூறுகையில், “எடப்பாடி அண்ணன் ஓகே சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார்.


அக்கா தமிழிசை அவர்களே.. உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புகிறேன் - திருமாவளவன்




எனவே கூட்டணி தர்மம் கருதி அதிமுக எடப்பாடி அண்ணன் கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் அண்ணியாருடன் சேர்ந்து கோட்டைக்குச் செல்லுங்கள். நான் உங்களுக்கு வேலை பார்க்க தயாராக உள்ளேன். கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த், எம்ஜிஆர் ஆகியோர் ஆரம்பித்த தேமுதிக அதிமுக ஆகியவை தான் மக்கள் கட்சி அவை தான் மீண்டும் ஜெயிக்க உள்ளது” என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக 40க்கு 40 ஜெயித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் 40க்கு 40 ஜெயிக்கவில்லை 21 தொகுதிகளில் தான் திமுக நேரடியாக ஜெயித்தது.




ஜெயித்தது மற்ற 19 தொகுதிகளும் அவர்கள் கூட்டணியில் கூட்டணி கட்சிகளின் பலம் உள்ள தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி அதிலிருந்து ஜெயித்துள்ளனர். மேலும் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தவருக்கு அமைச்சர் பதவி மீண்டும் அளித்துள்ளனர். அது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றனர். கேப்டன் இருந்த பொழுது கேப்டனை மீடியாக்கள் கிண்டலும் கேலியும் செய்து ஒதுக்கி வைத்திருந்தது. தற்பொழுது மக்கள் கேப்டன் நல்லவர் நல்லவர் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர் இருந்த பொழுது இந்த மக்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.


ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி




நாங்கள் காசு வாங்குகின்ற கட்சி என்று பேரம் பேசுகின்றோம் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் நான் இங்கு இந்த மீட்டிங்கில் ஓபன் சேலஞ்சாக சொல்லுகின்றேன் நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை காசு வாங்கியதும் இல்லை. 2005 மாநாடு நடத்தியது கூட எங்களது சொந்த நிலத்தை வைத்துத்தான் மாநாடு நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகின்றோம். எனவே இனிவரும் காலத்தில் மக்கள் கையில் உள்ளது. யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வாக்களித்தால் மீண்டும் அதிமுக ஆட்சியமையும். தேமுதிக எதிர்க்கட்சியாக அமரும். எனவே மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார். கூட்டத்தில், தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.