உளுந்தூர்பேட்டை: சென்னை காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தமுடியாத சூழலுக்கான காரணம் குறித்து பாஜக தமிழிசை விமர்சித்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி தந்துள்ளார்.


நாடு முழுவதும் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவிடங்களில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்காக வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி மண்டபத்துக்கு செல்லாமல் காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்திவிட்டு சென்றது சர்ச்சையானது.


இது குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை "மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை" என விமர்சித்திருந்தார். 


இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்து மாநாட்டில் பேசிய  திருமாவளவன், காந்தியை அவமதித்துவிட்டார் என தமிழிசை பேசுகிறார். எனக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்ற தொனியில் அக்கா தமிழிசை பேசுகிறார். அக்கா தமிழிசை அவர்களே உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புகிறேன். உங்களை போலத்தான் நானும் குடிப்பழக்கம் இல்லாதவன்.


காலையில் 9.30 மணியளவில் காந்தி மண்டபம் சென்றோம். ஆளுநர் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆளுநர் எப்போது வருவார் என்றபோது 10.30 மணிக்கு என்றனர். அதன் பிறகே காமராஜர் மணிமண்டபம் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். மாநாட்டையொட்டி உளுந்தூர்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்பதால் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம் என தெரிவித்துள்ளார்.


காந்தியை சுட்டுக்கொன்றான். ஆர்.எஸ்.எஸ் காரன்


காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளோம். என்னை குறித்து யார் என்ன சொன்னாலும் அதனைப்பற்றி எனக்கு கவலை இல்லை. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க காந்தி விரும்பியதால் தான் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றான். ஆர்.எஸ்.எஸ் காரன் சுட்டான். காரணம் மதச்சார்பின்மை என்பதுதான். அதனால் தான் காந்தி பிறந்தநாளின் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.


ராஜாஜி மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை


ராஜாஜிக்கு ஏன் பேனர் வைத்தோம். ராஜாஜி ஒரு பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். 1937ல் சேலத்தின் நகராட்சி தலைவராக இருந்தபோது ராஜாஜி மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் மாநாட்டில் பேனர் வைத்துள்ளோம். முதல்வர் ஸ்டாலினுக்கு இரு கோரிக்கை எங்கள் தீர்மாணங்களை கோரிக்கையாக ஏற்று அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டணி அரசியல் என்பது வேறு.


ஸ்ரீமன் நாராயணன் கமிட்டியின் பரிந்துரையைதான் நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம். மோடியோ அதனை நடைமுறைப்படுத்துங்கள். இந்துக்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் 99 சதவீதன் பேர் குடிப்பதில்லை. ஆனால் இந்துக்களில் எத்தனை பேர் குடிக்கிறார்கள்.


இந்து சமூகத்தை பாதுக்காக்க மோடி, அமிட்ஷாவுக்கு அக்கறை இருக்கிறதா இல்லையா. தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டுவாருங்கள். தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதும், தேசிய மதுக்கொள்கையை கொண்டு வர சொல்வதல் வேறுபாடு புரியவில்லை. மோடி அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.