வருமானவரித்துறை இணையதளத்தில் பான்கார்டு அப்ளை பண்ண ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே உள்ளதால் சிரமமாக இருக்கும். தமிழ்மொழியில் இருந்தால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறமோ, அதே அளவு வரி செலுத்துவது கடமை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
மதுரை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துபவர்கள் வருமாவரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளும்வகையில் மதுரை தமுக்கம் மைதான அரங்கில் TAXPAYERS HUB என்ற நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சியினை நடிகர் விஜய்சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
ஆடிட்டர்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கேன் விஜய் சேதுபதி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி...,” நானும் சில ஆடிட்டர்ஸ் அலுவலகத்தில் வேலைபார்த்திருக்கிறேன், வருமானவரித்துறை செலுத்துபவர்கள் வருமானவரித்துறை தொடர்பாக தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள யாரை பார்ப்பது என்ற நிலை இருந்தது. இப்போது எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் இதுபோன்ற இணையதளம் தொடங்கியுள்ளது வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது. அதிலும் கார்டூன் வடிவில் கொடுத்துள்ளது எளிமையாக சுவாரஸ்யமானது புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
வருமானவரித்துறையினர் இந்த முயற்சி அற்புதமானது
பான்கார்டு அப்ளை பண்ண வேண்டுமானால் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இதை நிரப்ப கடினமாக இருக்கும். தமிழிலும் இருந்தால் அது பார்த்தவுடன் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நீங்க இதை தொடங்குவதே இது எளிமையாக செல்ல வேண்டும் என்ற முயற்சிதான், பிரச்னை வரும்போது அதுபற்றி முன்னதாகவே விளக்கமும் தெளிவும் வேண்டும். அது நமக்கு புரியும் மொழியில் இருந்தால் தான் தெளிவாக இருக்கமுடியும், இல்லையெனில் மறுபடியும் ஒருத்தரை சார்ந்து இருக்க கூடிய நிலை உருவாகும், வருமானவரித்துறையினர் இந்த முயற்சி அற்புதமானது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது
வருமானவரி செலுத்துவது நமது கடமை அவசியம், நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறமோ அதே அளவு வரி செலுத்துவது கடமை, ரொம்பநாள் மனதில் உள்ள விஷயம் இதை சொல்கிறேன் : கஷ்டபட்டு சம்பாதித்து வரி கட்டுறோம், ஒருகாலத்தில் நல்லா சம்பாதிப்போம், ஒரு காலத்தில் வருமானம் இல்லாமல் போவோம் அப்போது வரிசெலுத்துபவர்களுக்கு சில பயன்கள் கிடைக்க வருமானவரித்துறையினர் வழிவகை செய்ய வேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; புஷ்பவனேஸ்வரரை தரிசித்த பக்தர்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?