மதுரையில் மெட்ரோ ரயில்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் - ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம் இருப்பிடத்தை தேர்வு செய்வது இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் IAS, மற்றும் திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெட்ரோ திட்டத்தை ஒத்தைக்கடை வரை மட்டும் சுருக்காமல் குறைந்தபட்சம் மேலூர் வரையாவது நீட்டிக்க வேண்டும். அப்போது தான் இப்பகுதி விவசாயம் மற்றும் தொழில்கள் மேம்படும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தித் தளத்தில் மெட்ரோ ரயில் மேலூரைத் தாண்டுமா.. மதுரை மக்களின் எதிர்பார்ப்பு இது தான் ! என்ற தலைபில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில், இது குறித்து மதுரை மேலூர் எட்டிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பா.ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
ஒத்தக்கடை முதல் மேலூர் வரை
அதில், ‘தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இந்நிலையில் தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 27 நிலையங்களுடன் திட்டம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்ட திட்டத்தில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில், 2 கூடுதல் பாதைகள் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒத்தக்கடை முதல் மேலூர் வரையிலான பகுதியை பரிசீலிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.
மனுவை பரிசீலிக்க வேண்டும்
மேலூர் பகுதியில் 50,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் சூழலில், ஏராளமான விவசாய உற்பத்தியை கொண்ட பகுதியாக மேலூர் உள்ளது. பலருக்கும் போக்குவரத்து தேவை அவசியமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியக்கிளாட் அமர்வு, "இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. இருப்பினும் வருங்காலங்களில் திட்டத்தை நீட்டிக்கும் போது இந்த மனுவை பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழ்நாடுதான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரமா..? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்