திரைப்பட நடிகரான நடிகர் விஜய் தற்போது ரசிகர்மன்றத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட செய்து சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனிடையே வாரிசு பட ரிலீஸ் விவகாரத்தில் உதயநிதிக்கும் நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் வெளியிடுவதிலும் திரையரங்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



 

இந்நிலையில் அரசியல் அழுத்தங்களை சமாளிக்க அரசியலில் காலடி எடுத்துவைப்பது போன்ற நடவடிக்கைகளை தனது ரசிகர்கள் சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில் மதுரையில் விஜயின் ரசிகர்கள் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியலை சீண்டும் வகையில்  திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் என வாரிசுகளின் படங்களை அச்சிட்டு "எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே" என்ற வாசகங்களுடன் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும்  விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 



மேலும் அந்த போஸ்டரில் காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி அவரது மகன் ராகுல் காந்தி, திமுக கட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றைய முதல்வர் ஸ்டாலின், மதிமுக கட்சி தலைவர் வைகோ அவரது மகன் துரை வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் வாரிசு புகைப்படங்கள் ஒட்டியுள்ள நிலையில் பாஜக குறித்து பதிவிடாத நிலையில் விஜய் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதை தனது ரசிகர்கள் மூலம் வெளிப்படுத்துகிறாரா? இல்லையெனில் நாம் தமிழர் கட்சியுடன் இணையவுள்ளாரா? என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண