தென் மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மிக முக்கியமானது. பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மதுரை மலர் சந்தையில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கும் விமானம் மூலம் மலர்கள் அனுப்பப்படுகிறது.

 





முதல் ரக மலர்கள் மதுரையில் கிடைப்பதால் பலரும் மதுரையில் கிடைக்கும் மலர்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலர்களின் விலை தொடர்ந்து அதிகரித்திருந்தது. தற்போது மழை பொழிவு காரணமாகவும் வரத்து குறைந்து பூக்களின் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது.



 

அதன்படி மல்லிகைப் பூ விலை கிலோவிற்கு மூவாயிரமும், பிச்சிப்பூ ஆயிரம் ரூபாயும், முல்லைப் பூ ஆயிரம் ரூபாயகவும், சம்மங்கி 80 ரூபாயாகவும், செண்டு மல்லி 80 ரூபாயாகவும், செவ்வந்தி 70 ரூபாயாகவும், கனகாம்பரம் 800 ரூபயாகவும் விற்பனையாகிறது.

 

மற்றும் ரயில்வே செய்திகள்

 


பாலருவி ரயில் ரத்து

 

கேரள மாநிலம் சாலக்குடி அருகே ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை (10.12.2022) திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு பாலருவி விரைவு ரயிலும் (16791) நாளை (11.12.22) ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் இருந்து புறப்படும் திருநெல்வேலி பாலருவி ரயில் (16792) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.