வண்ணங்களையும், டிசைன்களையும் வைத்து கிரியேட்டிவ் பொருட்கள் செய்யப்படுவது, வழக்கம். கண்களை கவரும்படி செய்யப்படும் அழகிய பொம்மைகளை தான் குழந்தைகள் விரும்புவார்கள். இந்த வியாபார யுக்தியை பயன்படுத்தி பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறு தீம்களில் பொம்பைகள் செய்கின்றனர்.
அந்த வகையில் தலைவர்களின் உருவத்தை வெளிபடுத்தும் டிசைன்களையும் செய்து விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களின் சாயலில் பொம்மைகள் செய்து மதுரையில் உள்ள ஸ்டோர் ஒன்று விற்பனைக்கு வைத்துள்ளது. இது பல வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் ஸ்டோர் ஒன்று பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குழந்தைகள் செக்சனின் அவர்களுக்கு தேவையான பொருட்களும் கியூட் பொம்மைகளும் வைத்துள்ளனர். அதில் பார்பி கேர்ள் , புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் ராணுவ வீரர்கள் போன்ற வித்தியாசமான பொம்மைகள் விற்கப்பட்டு வரக்கூடிய நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய உருவத்தை போன்ற பொம்மை 1554 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மூன்று விதமான தலைப்பாகையுடன் கூடிய பொம்மைகள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்று நல்ல விற்பனையாகி வருவதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்