நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும், முதியவர்களுக்கும் சேலை, அரிசி, சமையல் உபகரணங்கள், குடம் குழந்தைகளுக்கு நோட்டு ஆகியவற்றை த.வெ.க.,வினர் வழங்கினர்.

 

விஜய்யின் 50- வது பிறந்தநாள்:


 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் உயிர் பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர், உள்ளிட்ட பலரும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். குறிப்பாக மதுரையில் சேவை சார்ந்த உதவி செய்து பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில் 50 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியும் மதுரையில் நடைபெற்றுள்ளது.

 

கண்ணாடி வழங்கிய த.வெ.க.வினர்:
 

நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 50 பேருக்கு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 50 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

 

துப்புரவு பணியாளர்கள் பெண்கள், ஆண்கள் உட்பட அவர்களது குழந்தைகளுக்கும் கண் பார்வை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணை செயலாளர் விஜய் நண்பன் கல்லணை மற்றும் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 



 

 அதே போல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஊக்கத்தொகை, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்களுக்கு சேலை, அரிசி வழங்கினர்.







 

மதுரை ஜெயந்திபரம் பகுதியில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் தங்கப்பாண்டி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குறிப்பாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ரக் ஷனாவிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும், முதியவர்களுக்கும் சேலை, அரிசி, சமையல் உபகரணங்கள், குடம் குழந்தைகளுக்கு நோட்டு ஆகியவற்றை தவெக தெற்கு மாவட்ட கட்சியினர் வழங்கினர்.