Bank Holidays in June 2024: விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வங்கிகளுக்கு செல்லும் பணிகளுக்கான திட்டத்தை மேற்கொள்ளலாம்.
ஜுன் மாத வங்கி விடுமுறை:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தவிர, அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தின் 12 நாட்கள் விடுமுறை நாட்களில், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.
ஜூன் மாதத்தில் 5 சனிக்கிழமைகள்:
ஜூன் மாதத்தில் 5 சனிக்கிழமைகள் உள்ளன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17 அன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 18 ஆம் தேதியும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் இயங்காது. அத்தகைய சூழ்நிலையில், வங்கி தொடர்பான முக்கியமான வேலையை நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டுமானால், நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டியதில்லை. காரணம், அதற்கேற்றபடி நிங்கள் திட்டமிட்டுக்கொள்ள ஏதுவாக வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 2024ல் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
- ஜூன் 9: இமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூன் 10: ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாபில் வங்கிகள் செயல்படாது.
- ஜூன் 14 : பஹிலி ராஜா காரணமாக அன்று ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஜூன் 15 : வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள வங்கிகள் YMA நாளில் மூடப்பட்டிருக்கும்; மேலும் ராஜ சங்கராந்திக்கு ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும். - ஜூன் 17 : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில மாநிலங்களைத் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 21: வட் சாவித்திரி விரதத்திற்காக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
வார விடுமுறை - ஜூன் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் இரண்டாவது சனிக்கிழமையன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூன் 22 அன்று இந்தியா முழுவதும் நான்காவது சனிக்கிழமை வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆன்லைன் வங்கி சேவைகள் தொடரும்:
மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கி விடுமுறைகள் இருந்தாலும், பொதுமக்கள் வழக்கம்போல் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் அல்லது பிற வேலைகளைச் செய்யலாம். வங்கி விடுமுறைகள் இந்த வசதிகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வங்கி விடுமுறையின் போது, மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் வங்கி தொடர்பான பல பணிகளைச் செய்யலாம். வங்கி மூடப்படும் போது அனைத்து ஆன்லைன் வசதிகளும் செயல்படும்.