ரூ.200 கோடி மேல் மதிப்புள்ள மூலப்பொருள்களை தொழிற்சாலையின் உள்ளே உள்ளது அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது
தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களை வெளியே கொண்டு வர அனுமதி கோரிய வழக்கு. இதன்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
இந்த மனு நீதிபதிகள் துரைச்சாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ரூ.200 கோடி மேல் மதிப்புள்ள மூலப்பொருள்களை தொழிற்சாலையின் உள்ளே உள்ளது அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை: ஏலம் எடுப்பதில் தகராறு.. நிர்வாகியின் மண்டை உடைப்பு.. தாக்கிக்கொண்ட திமுகவினர்!