தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நிதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ என வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கன மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறதா? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டா போட்டி போடும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்! மக்கள் சாய்ஸில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா?
இதே போல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் பிற்பகல் முதல் இரவு 11 மணி வரை விட்டு விட்டு கன மழை பெய்தது.
இதனால் கும்பக்கரை அருவியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் இன்று இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.