ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வரும் காலகட்டத்தில் சந்தை நிலவரம், எந்த பிராண்டிற்கு பயனாளர்கள் அதிகம், மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் ஃபோன் எது உள்ளிட்ட தகவல்களை பற்றி வெளியாகியிருக்கும் ஆய்வின் விவரங்களை காணலாம். 


சாம்சங், ஒன் ப்ளஸ், Apple, விவோ, ஓப்போ உள்ளிட்ட பிராண்ட்களில் எது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்கள் ஆய்வின் முடிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 


ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் யார் ராஜா?


பல்வேறு மொபைல் ஃபோன்கள் சந்தையில் இருந்தாலும் மக்களின் தேர்வாக இருப்பது சாம்சங் பிராண்ட். Battery, கேமரா ஃபில்டர்ஸ், தரம் உள்ளிட்டவைகள் காரணமாக மக்கள் சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குவதற்கு விரும்புகின்றனர். 30 சதவீத மக்கள் சாம்சங் மற்றும் விவோ ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். 15.8% பேர் சாம்சங் பயனாளர்களாகவும் 15.7 % விவோ பிராண்ட் பயன்படுத்துபவராகவும் இருக்கின்றனர். அடுத்த இடங்களில் ரியல்மீ மற்றும் Xiomi முறையே 15%, 13.5% பயனாளர்களை கொண்டுள்ளதாக சர்வேயில் தெரிவிக்கப்படுள்ளது. ஒன் ப்ளஸ், 7.5%, ஐபோன் 2.6% பயனாளர்களை கொண்டுள்ளது. 2023-ம் ஆண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளுடன் ஒப்பிடுகையில், Motorola பிராண்ட் 3.3% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  iQOO, Nothing ஆகிய பிராண்ட்கள் முறையே 0.6% மற்றும் 0.5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 


OnePlus, Xiaomi, POCO, and Honor உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாடு கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. கூகுள், மைக்ரோமேக்ஸ், Infinix, ASUS ஆகிய பிராண்ட்கள் இந்தாண்டு புதிய பயனார்களை பெற தவறிவிட்டன. 


அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ஃபோன் எது?


91mobiles தரவுகளின் படி, மக்கள் அதிகம் வாங்க விரும்பும் ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட்களில் ஒன்பிளஸ், சாம்சங், விவோ,  Motorola, ரியல் மீ ஆகியவை முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.15.2% பேர்  ஒன் பிளஸ் வாங்க இருப்பதாக சர்வேயில் பதிலளித்துள்ளனர். 14.7% பேர் சாம்சங்க், 11.8% Motorola பிராண்ட் ஸ்மார்ட்ஃபோன் வாங்க இருப்பதாக குறிபிட்டுள்ளனர்.


சர்வே முடிவுகள் படி, ஒன் பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் பல்வேறு வகையான மக்களின் தேர்வாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 15.2% பேர் ஸ்மார்ட்ஃபோன் அப்கிரேட் செய்யும்போது ஒன் பிளஸ் பிராண்ட் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் Motorola, மூன்றாவது இடத்தில் ஐபோன் உள்ளது. 


ஜூன் 2024-ம் ஆண்டு வரை 36.9% பேர் 5G ஸ்மார்ஃபோன் பயன்பத்துகின்றனர். இது கடந்த 2023, ஏப்ரல் மாதத்தை விட 9.5% அதிகரித்துள்ளது. 10-ல் ஆறு பேர் 5G ஸ்மார்ட்ஃபோன்களை இன்னும் வாங்காதவர்கள்.


12.66% சாம்சங் பயனாளர்கள் ஒன் பிளஸ் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். விவோ, ரியல் மீ, Xiomi, Oppo உள்ளிட்ட பிராண்ட்களின் பயனாளர்களும் அடுத்தது ஒன் பிளஸ் ஃபோன்களை வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் அடுத்த தேர்வாக இருப்பது Motorola. போலவே ஒன் பிளஸ் பயனாளர்கள் 10.10% சாம்சங் பிராண்ட் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 


இந்த ஆய்விற்காக 15,000 தங்களது ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளன. அதிலிருந்து முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளனர்.