பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஜனவரி மாதத்தில் வியாழக்கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை  - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

 






 

மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) அதே ஜனவரி மாத வியாழக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த  சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 05.55  மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ஏற்பாடு மதுரை மற்றும் சுற்று வட்டார பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.


 

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா