பெரியார் பிரதான கால்வாய் இருபோக சாகுபடி நிலங்களில் முதல்போக சாகுபடிக்கு இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் மதுரை சங்கீதா தேனி மாவட்ட ஆட்சியர் சஜிவனா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் கடந்த மாதம் முதல் வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் சற்று உயரத்தொடங்கியது.
இந்த சூழலில் வைகை அணையிலிருந்து இன்றிலிருந்து முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் முழுமையாகவும் அதன் பிறகு 75 நாட்களுக்கு தண்ணீர் முறைவைத்தும் 120 நாட்களுக்கு மொத்தம் 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேனி மதுரை திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகியகால பயிர்களை நடவுசெய்து அதிகமாக மகசூல் பெறுமாறு பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
இன்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம்71 அடியில் தற்போது 51.71 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 706 கனஅடி ஆகவும், நீர் இருப்பு 2223 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் நவம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது பாசனத்திற்கு ஜூலை மாதமே திறக்கப்பட்டுள்ளதால் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.