தேனி மாவட்டம் சின்னமனூர் ரங்கநாதபுரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி. இவர் 2017ல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அதே பள்ளியில் கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சார்ந்த ஆசிரியை சகாய ஹென்றிட்சுதா என்பவர் பணியாற்றினார்.
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
அப்போது சகாய ஹென்றிட்சுதா தனது கணவர் விஜயலிங்க ராஜா என்பவர் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு முதல்வர் வரை பழக்கம் உள்ளது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் சிந்தலைச்சேரி அரசு பள்ளியில் ஆசிரியை பணியிடம் காலியாக உள்ளது. எனவும் அதனை வாங்கித் தருவதாக சகாய ஹென்றிட்சுதா தெரிவித்துள்ளார்.
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
இதனை அடுத்து அந்தப் பணிக்காக ரூபாய் 7 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிருபரின் வங்கி கணக்கு ரூபாய் 5 லட்சமும் மீதம் 2 லட்சம் பணத்தினை வீட்டில் வைத்து இருவரிடமும் ரதிதேவி வழங்கியுள்ளார். ஆனால் இருவரும் அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ரதிதேவி சின்னமனூர் காவல் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயலிங்க ராஜா மற்றும் அவரது மனைவி சகாய ஹென்றிட்சுதா ஆகியோர் மீது புகார் அளித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ரூபாய் 2 லட்சம் வரை தவணை முறையில் திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் பணத்தை வழங்காததால் உத்தமபாளையம் மெஜஸ்டிக் நீதிமன்ற உத்தரவின்படி சின்னமனூர் காவல்துறையினர் விஜயலிங்க ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். நிருபர் என்ற போர்வையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.