தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதற்கிடையே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பும் குறைந்துள்ளதால் வைகை அணைக்கு வரும் நீர் வரத்தானதும் குறைந்துள்ளது.


TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!




தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு இன்று முதல் 14 ஆம் தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதியில் உள்ள   நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும் வகையிலும், குடிநீர் ஆதாரங்கள் நிரம்பும் வகையிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 15119 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளது. அணையில் உள்ள ஏழு சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்வதால் தேனி , மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய  எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில்  யாரும் குளிப்பதற்காக இறங்கவோ, ஆற்றைக் கடக்க முயற்சிக்கவும் வேண்டாம் என்று வைகை பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!


10th Result District Wise: 10 வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய மாவட்டங்கள்... முதலிடம், கடைசியிடம் யாருக்கு தெரியுமா?


தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.


வைகை அணை


நிலை- 56.66  (71)அடி
கொள்ளளவு:2995Mcft
நீர்வரத்து: 259கனஅடி
வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcf