எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் பற்றி காணலாம். 

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தான். அவை தற்போது வெளியாகியிருக்கிறது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. சுமார் 4,107 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 8,94,264 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12 முதல் 22 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று பின்னர் மதிப்பெண் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். https://tnresults.nic.in/ அல்லது https://dge.tn.gov.in/ ஆகிய கீழ்கண்ட வலைத்தளங்களில் மாணவர்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் நூலகங்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் ஆகிய இடங்களில் மாணவர்கள் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். 

முதல் மற்றும் கடைசி இடம் பிடித்த மாவட்டங்கள்

மாவட்ட வாரியாக பார்க்கும் போது முதல் 10 இடங்களில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி,விருதுநகர், ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. கடைசி இடம் வேலூர் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.  

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் 

மாவட்டம்  தேர்ச்சி விகிதம்
சென்னை 88.21%
செங்கல்பட்டு 87.38%
காஞ்சிபுரம்  87.55%
திருவள்ளூர் 86.52%
கடலூர் 92.63%
விழுப்புரம்  94.11%
திருவண்ணாமலை 86.10%
அரியலூர் 97.31%
பெரம்பலூர் 94.77%
கள்ளக்குறிச்சி 86.83%
திருவாரூர் 92.49%
தஞ்சாவூர் 93.40%
மயிலாடுதுறை 90.48%
நாகப்பட்டினம் 89.70%
திருப்பத்தூர் 88.20%
வேலூர் 82.07%
திருச்சி 95.23%
கரூர் 93.59%
புதுக்கோட்டை 91.84%
தர்மபுரி 90.45%
கிருஷ்ணகிரி 91.43%
சேலம் 91.75%
ஊட்டி 90.61%
திருநெல்வேலி 93.04%
தென்காசி 92.69%
ராமநாதபுரம் 96.36%
தேனி 92.63%
மதுரை 94.07%
திண்டுக்கல் 92.32%
கோயம்புத்தூர் 94.01%
திருப்பூர் 92.38%
தூத்துக்குடி 94.39%
கன்னியாகுமரி 96.24%
விருதுநகர் 95.14%
நாமக்கல்  93.51%
சிவகங்கை 97.02%
ஈரோடு 95.08%
ராணிப்பேட்டை 88.58%

ALSO READ: Tamil Nadu 10th Result 2024 LIVE: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் லைவ்