உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் பிரசவ வார்டு பகுதியில் உள்ள மேற்கூரைகளின் கான்கிரீட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுவதால் அச்சத்துடனே கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துமனைக்கு வரும் அவல நிலை நீடித்து வருகிறது.



உசிலம்பட்டி மருத்துவமனை:


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு பகுதியில் தினசரி 10 முதல் 20 பிரசவங்களும், தினசரி நூற்றுக்கணக்கான கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றன.




இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகப்கேறு பிரிவு வளாகத்தில் உள்ள பரிசோதனை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை பிரிவு என மூன்று தளங்களுக்கு செல்லும் வழியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது.




இதனால் இந்த வளாகத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் அச்சத்துடனே வந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் விரிசலும் ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பொதுப்பணித்துறையினர் காலம் தாழ்த்தி வரும் சூழலில் தினசரி நூற்றுக்கணக்கான கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் விபத்து ஏதும் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகள் எடுத்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பு’ - ஹெச்.ராஜா அதிர்ச்சி தகவல்


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Nayan Wedding Anniversary: ‘நான் பிழை நீ மழலை’... முதல் திருமண நாளை கொண்டாடும் விக்கி - நயன்..குவியும் வாழ்த்துகள்..









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண