தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி உலகளவில் பிரபலமானவர்கள். இந்த கியூட் கப்பிள்ஸ் இன்று தங்களின் வாழ்வின் மிக முக்கியமான நாளை கொண்டாடுகிறார்கள். ஆம் இன்று அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளாகும். 


'நானும் ரவுடி தான்' படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்றாலும் நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் தான் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அன்று பற்றிய நெருப்பு பொறி இன்று முதலாம் ஆண்டு திருமண நாளில் வந்து நிற்கிறது. 6 ஆண்டுகளாக உங்க வீடு லவ் எங்க வீடு லவ் இல்லைங்க லவ்வோ லவ். லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்தவர்கள் ஒருநாள் அவர்களின் திருமணத்தை பற்றி மனம் திறந்தனர். 


 



பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம் :


கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் மிகவும் 20 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக மணிரத்னம், ஷாருக்கான்,ரஜினிகாந்த், அட்லீ போன்ற ஏராளமான திரைப்பிரபலங்கள் சூழ திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஒரு டாக்குமெண்டரி படமாக 'Nayantara: Beyond the Fairytale' என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டது.


இரண்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் :


திருமணமான நான்கே மாதங்களில் நாங்கள் இரண்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனோம் என விக்னேஷ் சிவன்  வெளியிட்ட அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விசாரணைகள் நடைபெற்றது. ஆனால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி. 


 



அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களான நயன் - விக்கி தம்பதி அவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பெயரிட்டனர். 


திருமணமான முதல் மாத நிறைவுக்கு நாளையே போட்டோஸ் போஸ்ட் செய்து மிகவும் ரொமான்டிக்காக கொண்டாடிய இந்த தம்பதி முதலாம் ஆண்டு நிறைவு நாளை எப்படி ஸ்பெஷலாக கொண்டாடப்போகிறார்கள் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவர்களின் டை ஹார்ட் ஃபேன்ஸ். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் திரளாக குவிந்து வருகிறது. 


ALSO READ | Nayanthara With Twins: க்யூட்டான தன் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா.. முதல் திருமண நாளில் வைரலாகும் புகைப்படம்..!