மதுரை, போடி இடையே 90 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 83 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரயில், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு அகல ரயில்பாதை பணிகள் தேனி வரை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மதுரை, தேனி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் சேவையை சென்னையில் நடந்த விழாவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் காயமின்றி தப்பிய பயணிகளுக்கு சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு



Coromandel Express Accident: ஒடிசாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 ரயில்கள்: கோர விபத்து நிகழ்ந்தது எப்படி தெரியுமா?


அதன்பிறகு தேனியில் இருந்து போடி வரையிலான பணிகள் நிறைவு பெற்று ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. போடி வரை பயணிகள் ரயிலை நீட்டிக்கவும், சென்னை, மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தேனி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி மாதமே போடி வரை ரயில் நீட்டிக்கப்படும் என்றும், சிறப்பு ரயில் சேவை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தென்னக ரயில்வே நிர்வாகமும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.



Odisha Train Accident: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!


ஆனால், அறிவித்த தேதியில் ரயில் நீட்டிப்பு செய்யப்படவில்லை. தொடர்ந்து எப்போது ரயில் நீட்டிப்பு செய்யப்படும் என்ற கேள்வியோடு மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், மதுரை,தேனி வரை இயக்கப்படும் ரயில் போடி வரை வருகிற 15-ந்தேதியில் இருந்து நீட்டிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதுபோல், சென்னை,மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும் 15-ந் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் போடிக்கு வரும். போடியில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்களும் சென்னைக்கு புறப்படும். இதற்கான ரயில் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நீட்டிப்பு சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைப்பார் என்றும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண