வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பயணிகளின் வசதிக்காக ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 3 வரை சென்னை - மதுரை - சென்னை வைகை விரைவு ரயில்கள்மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - சென்னை - கொல்லம் விரைவு ரயில்கள் ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வையொட்டி, ஜனவரி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் மாலை 6.08 முதல் 6.10 வரையும், மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் காலை 9.38 முதல் 9.40 வரையும் நின்று செல்லும் எனவும், அதேபோல், கொல்லம் - சென்னை எழும்பூர் இரவு 9.38 முதல் 9.40 வரை, சென்னை எழும்பூர் - கொல்லம் இரவு 9.18 முதல் 9.20 வரையிலும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - மதுரை மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3000க்கு விற்பனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்