தனக்காக காவல் நிலையம் முன்பாக அழுது நின்ற தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கவலைப்பட வேண்டாம். என, ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்த டி.டி.எஃப் வாசன். பிளையிங் கிஸ் கொடுத்து அனுப்பிவைத்த வாசன் ரசிகர்கள்.
கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன்
சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக டி.டி.எஃப் வாசன் மீது 7- பிரிவின் கீழ், மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 2-வது நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். 3 நாட்களுக்குள் டி.டி.எஃப் வாசனின் செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணா நகர் காவல் நிலையம் சம்மன் வழங்கியுள்ளது. அந்த சம்மனை ஏற்றுக்கொண்டு டி.டி.எஃப் வாசனின் செல்போனை திங்கள் கிழமை (ஜூன் 3 -ம் தேதி) மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வாசனின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
- Lok Sabha Election 2024: தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு
யாரும் அழ வேண்டாம், நான் இருக்கிறேன்
இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் வெளியே, நேற்று கண்ணீர் மல்க அழுது வீடியோ வெளியிட்ட ரசிகர்களை சந்தித்தார். காவல் நிலையத்தின் அருகில் சாலை ஓரத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது டி.டி.எஃப் வாசன் ”யாரும் அழ வேண்டாம், நான் இருக்கிறேன்” என ஆறுதல் தெரிவித்தார். மேலும் மதுரையில் தான் மஞ்சள் வீரன் ஆடியோ ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் மதுரை எனக்கு நன்கு பழகி விட்டதாக கூறிய டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப்பிடித்து செல்பி எடுத்து அனுப்பி வைத்தார். அப்போது சில ரசிகர்கள் பிளையிங் கிஸ் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது பேசிய டி.டி.எஃப் வாசன் ரசிகர்கள் : டி.டி.எஃப் வாசன் அரசியலுக்கு வரமாட்டார், நடிகர் விஜய்க்கும் எங்கள் டி.டி.எஃப் வாசன் அண்ணனுக்கும் போட்டியில்லை. இருவரையும் கம்பேர் பண்ணால் பெரிய பிரச்னை ஆகிரும். வாசன் ரொம்ப நல்லவரு” என்றார்.