ABP-CVoter Exit Poll 2024 LIVE: மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக; சொன்னதைச் செய்த பிரதமர் மோடி?
ABP-CVoter Exit Poll 2024 Live Updates: மக்களவைத் தேர்தலின் வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ABP - C Voter வெளியிடவுள்ள நிலையில் ABP Nadu வலைதளத்தில் நேரலையில் காணலாம்
இந்தியாவை தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஏபிபி சி வோட்டர் கணித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 353 முதல் 383 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கணித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற 7 கட்ட மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 152 முதல் 182 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Elections Exit Poll 2024 LIVE: இந்தியாவில் உத்தர பிரசே மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது.
ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 44 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் இதர கட்சிகள் 10.7 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்பதை கீழே காணலாம்.
ஒடிசாவில் பா.ஜ.க. கூட்டணி 17 முதல் 19 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் வெறும் 1 முதல் 3 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ABP Cvoter Exit Poll Result 2024 LIVE: நாட்டின் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 339 முதல் 396 வரையிலான தொகுதிகளைப் பெறலாம் என்று ஏபிபி – சி வோட்டர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 400 தொகுதிகளைப் பெறுவோம் என்ற வாக்குறுதியைப் பிரதமர் மோடி நிறைவேற்றி விடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. கூட்டணி 23 முதல் 27 தொகுதிகளை கைப்பற்றி அந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 13 முதல் 17 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Elections Exit Poll 2024 LIVE: தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 7 முதல் 9 இடங்களையும் என்டிஏ கூட்டணியும் 7 முதல் 9 தொகுதிகளையும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 தொகுதியைப் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இம்முறை 7 முதல் 9 தொகுதிகளைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் 21 முதல் 24 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் உள்ள 7 இடங்களில் 4 முதல் 6 இடங்களில் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 1 முதல் 3 இடங்கள் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி 34 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கணித்துள்ளது. இந்தியா கூட்டணி 3 முதல் 5 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ABP Cvoter Exit Poll Result 2024 LIVE: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் இந்தியா கூட்டணி எந்த இடத்தையுமே வெல்லாது என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணி 21 முதல் 25 இடங்களையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 0 முதல் 4 இடங்களையும் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு கூறி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்து என்டிஏ கூட்டணியாகக் களம் காண்கின்றன. தனித்துப் போட்டியிட்டு கடந்த முறை 1 இடத்தைக்கூட வெல்ல முடியாத, பாஜக இம்முறை கூட்டணியில் 21 முதல் 25 தொகுதிகளை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டணி பலமும் ஆளுங்கட்சி எதிர்ப்பு மனநிலையும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 3-5 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டின் மிக அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணியான தலைமையிலான கூட்டணி 62 முதல் 66 தொகுதிகளை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வே பெரும்பான்மையாக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 3 முதல் 5 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 23 முதல் 25 தொகுதிகள் வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரியவந்துள்ளது.
ஏபிபி - சிவோட்டர் கருத்துக் கணிப்பின்படி, கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் யுபிஏ கூட்டணி 17 முதல் 19 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல என்டிஏ கூட்டணி 1 முதல் 3 இடங்களைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இடதுசாரி முன்னணி எந்த இடங்களையும் பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மீண்டும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கோலோச்சும் என்று ஏபிபி சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 இடங்களில் இந்தியா கூட்டணி 7 முதல் 9 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 7 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் டிவி 9 கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 35 இடங்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக கூட்டணி 4 இடங்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிமுக எந்த இடங்களையும் கைப்பற்றாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பா.ம.க.வுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணிக்கு 18.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி 21 சதவீத வாக்குகள் பெறும் என்று ஏபிபி - சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 33 – 37 இடங்களை திமுக கூட்டணி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல 2- 4 இடங்களை பாஜக பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து. அதேபோல அதிமுக 0- 2 இடங்களைக் கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 46.3 சதவீத வாக்குகள் பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று ஏபிபி - சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Tamil Nadu Exit Poll 2024: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 37 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் என்று ஏபிபி - சி வோட்டரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3வது முறையாக தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியே ஆட்சி அமைக்கும் என ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சி.என்.என். - நியூஸ் 18 ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 36 முதல் 39 தொகுதிகள் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முழுவதும் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது வெளியானது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஏபிபி சி வோட்டரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்காக அரசியல் கட்சிகள், மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
2004ம் ஆண்டு நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மட்டுமே தவறானது. அந்த கருத்துக்கணிப்பில் 240க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று கணித்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
இன்னும் சற்று நேரத்தில் ஏபிபி - சி வோட்டரின் கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது.
காய்ச்சல் காரணமாக இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை எனவும் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பது ஜூன் 4ஆம் தேதி இரவு அல்லது 5ஆம் தேதி தெரியும் எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
மேலும், பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் எனவும் குறிப்பிட்டார்.
இன்னும் சற்று நேரத்தில் ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால் அடுத்து இந்தியாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் உண்மையை சொல்ல வேண்டும் எனவும் 295 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். இன்று வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் வெறும் கணிப்புகளே தவிர, கருத்துக்கணிப்பின் உண்மையான முடிவுகள் அல்ல. தேர்தல் முடிவுகள் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் முதன்முறையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 1957ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனாலும், 1980ம் ஆண்டு முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நாட்டில் மிகவும் பிரபலமாக அமைந்தது. அதற்கு காரணம் இந்தியாவில் அப்போதுதான் தொலைக்காட்சி அதிகளவில் பிரபலம் ஆகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது பல தொகுதிகளில் வாக்காளர்களின் மனநிலையை சேகரிப்பது ஆகும். அதாவது, வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு வாக்களித்த வாக்காளர்களிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்பதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும். இந்த கருத்துக்கணிப்பில் கருத்து கூறியவர்களின் ரகசியம் காக்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழுவதும் நிறைவடைந்த பிறகு வெளியாகும் கருத்துக்கணிப்பு ஆகும். தற்போதைய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழலில், 7 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பிறகு வெளியாவதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தெந்த கட்சிகள்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? என்பதே ஆகும். இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் இருந்து பெரும்பாலும் மாறுபட்டே வரும்.
2024 மக்களவை தேர்தலில் முக்கிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் யார் எவ்வளவு வெற்றிபெறுவார்கள் என்பது குறித்தும் news.abplive.com இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஏழாவது கட்ட வாக்குப்பதிவு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களையும் Android மற்றும் iOS இல் ABP லைவ் செயலியை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ABP Live தனது X தளத்தில் வெளியிடும்.
ஏபிபி நியூஸ் யூடியூப் சேனலில் நேரலை விவாதங்களையும் நாட்டின் மனநிலையின் மிகத் துல்லியமான மதிப்பீட்டைப் பார்க்கலாம்.
2024 மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் சூழலில், வெற்றி, தோல்வி பற்றிய கணிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
நாட்டின் நாடி துடிப்பை கணிக்கும் ABP-Cvoter கருத்துக்கணிப்பு இன்று வெளியிடப்படுகிறது. சி வோட்டர் நிறுவனத்துடன் ஏபிபி நெட்வொர்க் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் நீங்களும் பங்கு கொள்ளலாம்.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாஜக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 63 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 33.2 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 3.8 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 47 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 44.9 சதவிகித வாக்குகளையும், PDP 7 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 1.1 சதவிகித வாக்குகளையும் பெறும்
குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 63 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 33.7 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. இதர கட்சிகள் 3.3 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அதில் மாநில வாரியாக முடிவுகள் வெளியாகின.
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல்19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
Background
ABP-CVoter Lok Sabha Elections Exit Poll LIVE Result 2024
இந்தியாவில், 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவுபெற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகயுள்ளன. ABP - சி வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பு முடிவுகளின்படி(ABP CVoter Exit Poll Results), யாருக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
கருத்து கணிப்பு:
ABP-Cvoter கருத்து கணிப்பானது, நாட்டின் மிகத் துல்லியமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 542 தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்களை ABP-CVoter நடத்தும் கருத்துக்கணிப்பு உங்களுக்கு வழங்குகிறது.
மக்களவைத் தேர்தல்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக பார்க்கப்படும் இந்தியாவில் மக்களவை தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கான, தேர்தலின் முடிவுகளானது, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ஆம் தேதி தெரியவரும்.
இத்தேர்தல் முடிவுக்காக, இந்தியா நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்க 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தினர்.
இந்நிலையில், இன்றுடன் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவு குறித்தான கருத்து கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடுகிறது.
கடுமையான போட்டி:
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி இடையேயான மோதல் தீவிரமாக இருந்தது. தங்களது கூட்டணி வந்தால் என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும், நாட்டின் வளர்ச்சிக்கான கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
அதற்கும் மேலாக மதம் தொடர்பான பேச்சுக்களும் தேர்தலில் அதிகம் காணப்பட்டன. இந்நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலின், கடைசி கட்ட வாக்குப்பதிவான இன்று மாலை 6 மணியளவில் முடிகிறது.
தொடர் நேரலை:
இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடவுள்ளன.
இந்திய அளவில் யார் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்தான கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடவுள்ளன.
நட்சத்திர வேட்பாளர்கள் யாருக்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்பு முடிவுகள் என்ன சொல்கிறது என்பது குறித்தும் பார்ப்போம்.
மேலும் மக்களவை தேர்தல், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு குறித்தான கூடுதல் மற்றும் விரிவான தகவல்களை ஏப்பி நாடு ABP Nadu வலைதளத்தில் நேரடியாக வழங்க இருக்கிறோம். அதற்கு, தொடர்ந்து இணைந்திருங்கள், இந்த நேரலை பக்கத்தில்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -