தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாறு நீரைக்கொண்டு விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.


Lok Sabha Election 2024: தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு




இந்த ஆண்டு மழை பருவ மழை மற்றும் கோடை மழை போதுமான அளவு பெய்யாததால் அனணயில் தண்ணீர் மட்டம் குறைந்தே காணப்படுகிறது. முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல் நாள் தண்ணீர் திறக்க விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும்  நிகழ்வு நடைபெற்றது.


Vaikasi Brahmotsavam 2024: காஞ்சியின் அடுத்த திருவிழா தொடங்கியது..! வைகுந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்..!




IND vs BAN: டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. கோலி விளையாடுவது சந்தேகம்?


கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தலைமையிலான பொறியாளர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர். விநாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 300 கன அடி வீதம், 01.06.2023 முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறக்கப்படுகிறது . இந்நிகழ்வில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சிலர் பங்கேற்று மலர் தூவி வரவேற்றனர்.