சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை ஊஞ்சலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பயணிகள் வசதிக்காக மைசூர் தூத்துக்குடி, மைசூர் நாகர்கோவில், கோயம்புத்தூர் நாகர்கோவில் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு ஊஞ்சலூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.









 

அதன்படி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 17 வரை மைசூரில் இருந்து புறப்படும் தூத்துக்குடி விரைவு ரயில் (16236), டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322), நாகர்கோவில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர்  பகல் நேர விரைவு ரயில் (16321), தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.