உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென முடங்கி பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.



 

இந்த இணையதளத்தில் கோயில் திருவிழா கோயிலின் வரலாறு கோயில் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும். இணையதளம் முடங்கியதால் வெளி மாநிலம், வெளி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் கோயில் இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் தமிழில் மாற்ற வேண்டும் என பக்தர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.




 

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கோவில் இணையத்தை மேம்படுத்தி புது பொலிவுடன் மாற்றி உள்ளது. கோயில் இணையதளம் முழுமையாக தமிழிலும் மீனாட்சி அம்மன் கோவிலின் பூஜைகள், வழிபாட்டு முறைகள், வரலாறுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில்கள் பற்றிய விவரங்களும் கோவிலில் 12 மாதங்களும் நடைபெறும் திருவிழா பற்றிய விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பக்தர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

 




அதே போல் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட 23 கோவில்களில் நடை அடைப்பு கோயில் நிர்வாக தகவல் தெரிவித்துள்ளது.

 

 மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும்  அதன் 22 உபகோயில்களில் (25.10.22) அன்று சூரிய கிரகணம் மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 5.23 மணிக்கு முடிவடைவதால் 25.10.2022 செல்வாய் கிழமை அன்று காலசந்தி பூஜை காலத்தில், உச்சிகாலம், சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று திருக்கோயில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை எனவும், 25.10.2022ம் தேதி சூரிய கிரகணம் மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும் எனவும், அதன் பின் அபிஷேகம் முடிவடைந்து அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும் எனவும், அதன் பின் இரவு 07.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 07.00 மணிக்குப் பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண