கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில்  யானை தந்தம் விற்க்க முயன்ற கேரளா மற்றும்  தமிழகத்தை சேர்ந்த ஏழு பேரை  வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 2 யானை தந்தம் பறிமுதல். மேலும் ஒருவர் தலைமறைவு..


CM Stalin: "அனைத்து மொழிகளுக்கும் தமிழ்நாடு குரல் கொடுக்கும்" - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!


தேனி மாவட்டம் தமிழக எல்லை குமுளி பகுதியில் சிலர் யானை தந்தம் விற்க முயல்வதாக சென்னை தலைமை வன பாதுகாவலரின் (பிசிசிஎப்) கிழ் உள்ள மதுரை வனத்துறை விஜிலென்ஸ் குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,இக்குழுவினர் யானைத்தந்த வியாபாரிகளிடம் தந்தம் விலைக்கு வாங்குவதுபோல் பேசி உள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை தமிழக எல்லை கூடலூர் காப்புக்காடு எல்லைப்பகுதிக்கு இரண்டு யானைத்தந்தங்களுடன் வந்த இருவரை விஜிலென்ஸ் டீம் பிடித்தது. இதையடுத்து அவர்களிடம் கம்பம் மேற்கு மற்றும் கூடலூர் வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். 


2022 ஆண்டுக்கான ஆடவர் டி-20 உலக கோப்பை... நட்சத்திர வர்ணனையாளர்கள் பட்டியல் இதோ...


விசாரணையில் இதில் சம்மந்தப்பட்டவர்கள் என கருதப்படும்  லோயர் கேம்ப்பை சேர்ந்த முருகன் (63),வெள்ளையன் (60) மற்றும் குமுளியை சேர்ந்த அசோகன் (50), ஜோன்சன் (51),மேத்துஜான் (53), அப்துல் அஜீஸ் (34)மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த  நிதின் ( 30 )  உட்பட ஏழு  பேர்களை பிடித்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருவதாக தெரிவித்தனர்.தொடந்து நீதிமன்ற காவலில் உள்ள  ஏழு பேர்களிடமும், தந்தம் எப்படி கிடைத்தது,


ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!




Malavika Mohanan: மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!


யானை கொல்லப்பட்டு தந்தம் எடுக்கப்பட்டதா? என லோயர்கேம்ப் வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு  யானை தந்தமும் 62.சென்டி மீட்டர். மற்றொன்று 63 சென்டி மீட்டர் எனவும்  4 கிலோ எடை உள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தை  ஆய்வுக்கு அனுப்பி யானையின் வயது மற்றும் யானை கொல்லப்பட்டு எடுக்கப்பட்டதா அல்லது  எவ்வாறு தந்தம் எடுக்கப்பட்டது என தெரியவரும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண