மதுரையில், 10 மாடிகளுடன் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மாநகராட்சி ஆணையரும், தீயணைப்பு துறை அலுவலரும் ஆய்வு நடத்தி , அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 


மேலும், வழக்கை வரும் ஜனவரி 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மதுரையில் மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் அருகே சரவணா ஸ்டோர்ஸ் 10 மாடிகளுடன் உள்ளது. இந்த கட்டடம் முழுமையாக கட்டப்படவில்லை என சமூக நல ஆர்வலர் ஒருவரால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனுவில், கட்டடங்கள் முழுமையாக கட்டவில்லை என்றும், அதற்குள்ளாகவே திறக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பல வாகனங்கள் கடைக்கு வெளியே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 


எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மாநகராட்சி ஆணையரும், தீயணைப்பு துறை அலுவலரும் ஆய்வு நடத்தி , அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கை வரும் ஜனவரி 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Also Read: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் இணைப்பு தொடர்பாக பரவும் தவறான கருத்துகளை நம்ப தேவையில்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி


Also Read: CBSE Date Sheet 2023: 2023 சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?: காத்திருக்கும் மாணவர்கள்..