முன்விரோதத்தால் நடந்த கொலை; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

முன்விரோதம் காரணமாக கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

தேனி மாவட்டம் போடி திருமலாபுறத்தைச் சேர்ந்த செல்வ பாண்டியன். புகைப்பட கலைஞரான இவர் அப்பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் போடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தீஸ்வரன் அவரது நண்பர்களுடன் கையில் கத்தியுடன் சாலையில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் அதை புகைப்படக் கலைஞரான செல்வ பாண்டியன் தட்டி கேட்ட போது அப்பகுதியில் காவல்துறையினரும் வந்ததால் கார்த்தீஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

Continues below advertisement

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... இந்தெந்த இடங்களில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்....


சாலையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டதை ஸ்டுடியோ உரிமையாளர் செல்வ பாண்டியன் காவல்துறைக்கு தகவல் கொடுத்து காவல் துறையினர் வந்ததாக எண்ணி செல்வ பாண்டியனை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கார்த்தீஸ்வரன் கூறிவந்தார். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு செல்வ பாண்டியனை அவர் நடத்தி வந்த ஸ்டுடியோக்குள் புகுந்து கார்த்தீஸ்வரன் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ய முயற்சி செய்தபோது அவ்வழியாக வந்த மணவாளன் என்பவர் சம்பவத்தை பார்த்து கூச்சலிடவே கார்த்தீஸ்வரன் தப்பிச் சென்றுள்ளார். 

டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர்... ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

இதனைத் தொடர்ந்து கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவரை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வ பாண்டியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் மணவாளன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

Railway: ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தொடங்கியது முன்பதிவு!

Sasikala Pushpa: கால் இருக்காதுன்னு மிரட்டிய சசிகலா புஷ்பா; கார், வீடுகள் மீது தாக்குதல் - போலீஸ் தீவிர விசாரணை!

நேற்று வழக்கு விசாரணை முடிவில் செல்வ பாண்டியனை கொலை செய்த வழக்கில் கார்த்தீஸ்வரன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை 5000 ரூபாய் அபராதம் அதை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பிரிவு 450 இந்திய தண்டனைச் சட்டத்தின் படி மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை 5000 ரூபாய் அபராதம் அதை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும், இந்த  இரண்டு தண்டனைகளையும் குற்றவாளி கார்த்தீஸ்வரன் ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என  மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement