Summer Vacation: முடியப்போகும் கோடை விடுமுறை... கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்....!

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான உலகபுகழ் பெற்ற மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர்ந்த கால சூழல் சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. தரைப்பகுதியில் அதிக வெப்பம் நிலவுவதால், கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. கொடைக்கானல் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் நேற்று மற்றும் இன்று அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Continues below advertisement

CM Salem Visit: கலைஞர் சிலை, ஈரடுக்கு நகர பேருந்து நிலையம்... சேலத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!


சீசனை முன்னிட்டு கூடுதலாக நியமிக்கப்பட்டிருந்த போலீசார் பணி முடிந்து திரும்பி விட்டனர். போதிய போலீசார் இல்லாததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, டைகர்சோலை உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலையும் கடந்து வந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு உள்ளிட்டசுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். மேலும் அங்கு புகைப்படம்,செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Ulundurpet : டாரஸ் லாரி மீது அரசு பேருந்து மோதல்.. விபத்தில் 20 பேருக்கு காயம்.. நடந்தது என்ன?


Amit Shah: சென்னை வந்தார் அமைச்சர் அமித்ஷா.... மின் தடையால் பரபரப்பான விமான நிலையம்! நள்ளிரவில் நடந்தது என்ன?

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். ஏரியில் எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளில் பொங்கி வழியும் தண்ணீர் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது. மேலும் ஏரியை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தனர். இதேபோல் ரோஜாப்பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான பூக்களையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பகலில் சுமார் 15 நிமிடம் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola