கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 


கடலூரில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து மாலை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றது. இதற்கிடையே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று சாலை விதிகளுக்கு புறம்பாக விபத்து பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கெடிலத்தை கடந்து சென்ற அரசு பேருந்து அந்த கனரக லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.


இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தற்போது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக அங்கு ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண