கனமழை எச்சரிக்கையால்  கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து மறு உத்தர வரும் வரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரகர் அறிவிப்பு.


125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!




கும்பக்கரை அருவி


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது தான் கும்பக்கரை அருவி இந்த கும்பக்கரை அருவிக்கு வருடத்தில் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருப்பதால் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!




வெள்ளப்பெருக்கு


இந்த நிலையில் பெரியகுளம் அருகே உள்ள  கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி,  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டால்  சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால்  எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில்  குளிப்பதற்கு தற்போது இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.


RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!




அருவிக்கு செல்ல தடை


மேலும்  மறு உத்தரவு வரும் வரை  கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவின் அருகில் சென்று பார்பதற்கும்  தடை விதிப்பதாக கூறி தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதனால் கும்பக்கரை அறிவிக்கு வருகிற சுற்றுலா பயணிகள் மறு உத்தரவு அறிவிப்பு வெளியிடும் வரை கும்பக்கரை அருவிக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் வனச்சரகர் டேவிட் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.