வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதை தொடர்ந்து கும்பக்கரை அருவியில் 43 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


EXCLUSIVE: மருத்துவப் பணியாளர் தேர்வு முடிவிலும் தாமதம்: காத்திருந்து நொந்து போகும் எம்ஆர்பி தேர்வர்கள்!



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.


Fire Accident: மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து: விண்ணை முட்டும் கரும்புகை...சென்னையில் பரபரப்பு!



கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடைவித்தனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாகவும் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கும்பக்கரை அருவியில் 43 நாட்கள் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்  .


TN Headlines: சி.பி.சி.எல். நிறுவனத்தில் தீ விபத்து! ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர்! இன்று இதுவரை நடந்தது இதுதான்!




கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் 3வது நாள் பகல் பத்து நிகழ்ச்சி


இதனை தொடர்ந்து கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால் தற்போது கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராகி உள்ளதால் அருவியில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சபரிமலை மற்றும் முருகன் கோவில் சீசன் என்பதால் கும்பக்கரை அருவியில் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் குவிந்தனர். மேலும் அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆந்த குளியலிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.