உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

 



பழனியாண்டவர் சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.


 


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் மெயின் ரோட்டில் பி.எம்.டி நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில். இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்த கோடிகள் கலந்துகொண்டனர்.



இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஜெயம் மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றதை  தொடர்ந்து சரியாக காலை 9:30 மணியளவில் புறப்பாடு நடைபெற்றது. 

 




 

 பின்னர் மங்கள இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனியாண்டவர் சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.



 

இது குறித்து உசிலம்பட்டி பிரமுகர்கள் கூறுகையில், “பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர். நினைத்ததை நிறைவேற்றும் பழனியாண்டவர் சன்னதி வந்தால் கஷ்ட, நஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை” எனவும் தெரிவித்தார்.


 

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா