1. ஒருவர் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி வரும் போது, அவருக்கு விரைவான நியயமான நீதி கிடைக்க வேண்டும். அதை நோக்கி தான் நீதிமன்ற பணிகள் இருக்க வேண்டும். வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, மதுரை கிளையில் பேச்சு.
2. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தொடர்ந்த வழக்கு, இந்த வழக்கை எங்கு பட்டியலிடுவது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி பார்வைக்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
3. திருச்சியில் ஆடு திருடர்களை கைது செய்ய முயன்று கொலையான எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு 30 ஆயிரத்தை மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம், தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல் பாண்டியன் வழங்கினார்.
4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வாங்க வியாபாரிகள் மேலூர் பகுதியில் முகாமிட்டுள்ளார். இந்தாண்டு விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், பேய்குளம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விதிகளை மீறிய 5 உரக்கடைகள் மூடப்பட்டு `சீல்' வைக்கப்பட்டு உள்ளன. மேலும், மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி வேளாண்மைத்துறை, வருவாய்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கொண்டு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
6. கூடங்குளம் அணு உலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி 5 கிராமங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மக்கள் அணு உலை வளாகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படாது என அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
7. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் தென் கடல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கின்றனர்.
8. தேனி , திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜல்லிக்கட்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
9.தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆட்சியரின் காவலர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காவலரின் உடலுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் அஞ்சலி செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!