1. நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்படும், ரவுடிகள், கூலிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர், என நெல்லையில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி சரவணன் தெரிவித்துள்ளார்.

 

2. தமிழ்நாட்டில் 'கள்' இறக்கி போராட்டம் நடத்தப்படும், வரும் ஜனவரி 21 முதல் போராட்டம் நடத்தபடும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

 

3. கேரள மாநிலம் ஆர்யங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் திங்கட்கிழமை (06.12.2021) மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) செங்கோட்டை - கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இன்று (07.12.2021) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102) கொல்லம் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கோட்டையிலிருந்து இயக்கப்படும். மேலும் திங்கட்கிழமை அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

 

4. பாஜகவினர் தர்ணா போராட்டம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த  கல்லூரி மாணவனுக்கு நீதி வேண்டும் நிவாரணம் வழங்கக் கோரி  வலியுறுத்தி பாஜக கட்சியினர் முதுகுளத்தூரில்  ஆர்ப்பாட்டம்.

 

5. கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் வேண்டும் என ஆட்கொணர்வு மனுவில் கோரியவருக்கு 1.50 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

6. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை, வீடியோ பதிவு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விரைவாக தேர்தலை நடத்தவும் கோரிய வழக்கு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

7. ஜாதி மறுப்பு திருமணம் செய்த தன்னை ஆணவக் கொலை செய்ய முயற்சித்த ஊராட்சி மன்ற தலைவி ( அம்மா ) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி (மகள்)  வழக்கு.

 

 

8. கேரள அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் தர்ணா இரு மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு.





 







9. ராமநாதபுரம் பெரியகண்மாய் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் 250 கன அடி அளவில் தென்கலுங்கு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

 

10. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவ்வழியாக சென்ற ஆட்சியரின் காரை வழிமறித்து முறையிட்டனர்.