சென்னை சேர்ந்த கயல்விழி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், ராமநாதபுரம் மாவட்ட கமுதி ஒன்றியம் சடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவியாக தற்போது பதவி வகிக்கும் மல்லிகா மலைச்சாமி மகள் நான், பொறியியல் கல்லூரியில் படித்து வந்தேன். அப்பொழுது நான் பட்டியலினத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தேன். இது குறித்த தகவல் தெரிந்தவுடன் என்னுடைய உறவினர்கள் குறிப்பாக எனது அம்மா மல்லிகா மலைச்சாமி மற்றும் தாய்மாமா தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்த நிலையில் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம். இந்த சூழலில் அ.தி.மு.கவை சேர்ந்தவர் எனது அம்மா மற்றும் முனியசாமி ஆகியோர் அவர்களுடைய கட்சி அதிகார பலத்தை கொண்டு எங்களை மிரட்டி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதியின் சாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் என் மீது பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர் . தேர்தல் ஆணைய விதிமுறையை பின்பற்றாத விதிமுறைகளை பின்பற்றாமலும் எனது அம்மா வேட்பு மனு தாக்கலின் போது தவறான தகவலையும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களையும் சேர்த்துள்ளார் எனவே இவரது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன் மனு குறித்து மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் தாயார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் தாயார் ஊராட்சி மன்ற தலைவி மீது மனு தாரர் கொடுத்த புகாரின் மீது எட்டு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்ச்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.