தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உடன் தங்குபவர்கள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.


’தல தோனி ஹாப்பி அண்ணாச்சி’ - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன நடிகர் ஹரிஸ் கல்யாண்




இவர்கள் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கேண்டீன்கள் அமைக்க உரிமம் பெறுவதற்கே தலா ரூ. 10 முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்கு கேண்டீன்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள் உள்ளதாகவும், அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாக துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.


ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு.. ஆர்.பி.எஃப் வீரர் உள்பட 4 பேர் உயிரிழப்பு; மகாராஸ்ட்ராவில் அதிர்ச்சி




இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூபாய் 3.5 லட்சம் வழங்குவதாக தானே வீடியோவில் கூறி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இது தவிர அதே வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கும் மாரிச்சாமி சென்று கட்டு கட்டாக பணம் வழங்கி உள்ளார். அது தொடர்பான காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன.மாரிச்சாமியிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூபாய் ரூ.16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


மீண்டும் கிராமத்திற்குள் புகுந்த மக்னா யானை: மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை




மருத்துவக் கல்லூரி இயக்குனர் (சிறப்பு அலுவலர்) மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராக உள்ள மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. இந்த நிலையில்  தேனி மருத்துவமனையில் கேண்டீன் நடத்துவதற்கு மருத்துவ கல்லூரி முதல்வர் லஞ்சம் பெற்றது உறுதியானதாக கூறி கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை சுகாதாரத்துரை அமைச்சர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண