திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரையி இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்த்திகை தீபம்


கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம் ஆகும். சிவ பக்தர்களுக்கு கொண்டாட்டமான பண்டிகையாக திருக்கார்த்திகை தீபம் திகழ்கிறது. உலகெங்கும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபம் கோலாலகமாக கொண்டாடப்படுகிறது.

 

கார்த்திகை தீபம் எப்போது?


 

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் 4ம் தேதி ஏற்றப்பட்டுவிட்டது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ம் தேதியான வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம்  ஏற்றப்படும்.  கார்த்திகை தீபம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகும். பஞ்சபூத தலங்களில் முதன்மையானதும், அக்னி தலமாகவும் திகழும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்நிலையில் பக்தர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா 2024 பண்டிகை 13.12.2024 அன்று வருவதை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை போக்குவரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு 12.12.2024 முதல் 15.12.2024 வரை 300 பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

முன்பதிவு செய்துகொள்ளுங்கள்


 

இப்போக்குவரத்துக் கழகம் மூலம் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும். முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in. TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.