கடந்த 22ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோயிலில் இருந்து 10 பேர் கொண்ட ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்றனர். இதையடுத்து 23ஆம் தேதி காலை சாமி தரிசனம் முடித்து விட்டு மாலை குமுளி வழியாக தங்களது சொந்த ஊரான ஆண்டிபட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் குமுளி மலைப் பாதையில் கார் வந்து கொண்டிருந்தது.


Tirupati: திருப்பதி போறீங்களா? இந்த சான்றிதழ் கட்டாயம்... மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த தேவஸ்தானம்!




அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்ததை அறிந்த கேரள குமுளி காவல் நிலைய போலீசாரும் , தமிழக லோயர்கேம்ப் காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய நபர்களை தீயணைப்பு துறையினருடன் மீட்ட போது இந்த விபத்து  சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 7 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர்.


MGR Remembrance Day: வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நின்ற எம்.ஜி.ஆர்...! எப்படி?


இந்த விபத்து  சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மருத்துவமனையில் வைத்திருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் நேரில் வந்து அடையாளம் காண்பித்தனர். அதன்படி உயிரிழந்தவர்கள் யார், யார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. 


Top 10 Church: உலகிலேயே மிகப்பெரிய டாப் 10 தேவாலயங்கள் இதுதான்...! பிரம்மாண்ட தேவாலயங்களின் பட்டியல்..


குமுளி மலைப்பாதை அருகே நடந்த விபத்து குறித்து தகவலறிந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெற்று வருவர்களுக்கு ஆறுதல் கூறியும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


விபத்தில் இறந்தவர்கள்: 8 பேர் விபரம்


1) முனியாண்டி 55/22


S/o. பொன்னையா


BSNL ஆபிஸ் எதிர்புறம்


சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.


 


2)  தேவதாஸ் 55/22


S/o. பரமசிவம்


பத்திர ஆபிஸ் ரோடு


ஆண்டிபட்டி,


 


3) கன்னிச்சாமி 55/22


S/o. நாகப்பன் சேர்வை


சாவடித் தெரு


மறவபட்டி, ஆண்டிபட்டி,


 


4) நாகராஜ் 46/22,


S/o.ராமசாமி


சுடுகாட்டுத் தெரு


ஆண்டிபட்டி.


 


 


5) வினோத் 47/22


S/o. சுந்தரம்


S.S.புரம்


ஆண்டிப்பட்டி


 


6) சிவக்குமார் 45/22


S/o. சுப்பையா


பத்திர ஆபீஸ் ரோடு


ஆண்டிபட்டி,


 


7) கலைச்செல்வன் 45/22


S/o. மாரிமுத்து



  1. பொம்மிநாயக்கன்பட்டி


ஆண்டிபட்டி,


 


 வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர்:*


 8) கோபாலகிருஷ்ணன் 42/22


S/o. ஆண்டிச்சாமி


பிச்சம்பட்டி


ஆண்டிபட்டி


 


 காயம்பட்டவர்கள் : 2 பேர்


1) ஹரிஹன் 7/22,


S/o.ராஜா


கோழிப்பண்ணை தெரு


சந்தைப்பேட்டை


ஆண்டிபட்டி,


 


2) ராஜா 40/22


S/o.நடராஜ்


கோழிப்பண்ணை தெரு


சந்தைப்பேட்டை


ஆண்டிபட்டி,




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண