மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீருக்காக வைகை அணையில் திறக்கப்பட்டு வந்த வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.




Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளுக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, அல்லிநகரம் நகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வைகை அணையின் பிக்கப் டேம் பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மதுரை மற்றும் தேனி மாவட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.




இந்நிலையில் வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் பிரதான கால்வாய்க்கு செல்லும் பழைய மதகுகளை அகற்றி விட்டு புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் 1.10கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் இறுதி கட்டப்பணிகள் காரணமாகவும் இப்பகுதிக்கு முன்பு தடுப்பணையை சுற்றியுள்ள பகுதியிலும், சுத்திகரிப்பு நிலையங்களை சுற்றியுள்ள பகுதியிலும் தேங்கியுள்ள சகதி கலந்த மணல் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் காரணமாக மதுரை , தேனி மாவட்டத்திற்கு குடிநீருக்காக நாள்தோறும் வைகைஅணையில் இருந்து வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.


Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?




வினாடிக்கு 72 கன அடி வீதம் நாள்தோறும் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று முதல் வருகிற 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மதுரை, தேனி மாவட்டங்களில் குடிநீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் பிரதான கால்வாய் மதகுகள் பராமரிப்பு பணி புதுப்பித்து நடைபெறும் நிலையில் இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேர்ந்து கால்வாயில் பழைய இயந்திரம் மூலம் தண்ணீர் திறந்து வந்தனர். தற்போது பவர் சிஸ்டம் மூலம் எளிதில் தண்ணீர் திறக்கப்படும் வகையில் புதிய இயந்திரம் மதகுப்பகுதிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.