தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சுருளிவேலு ( 52). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். சுருளிவேலு 3 சக்கர சைக்கிளில் ரொட்டி, கேக், பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீதி, வீதியாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
திண்டுக்கல் : பழனியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து செப்பேடு கண்டுபிடிப்பு.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் சுருளிவேலு தனது 3 சக்கர சைக்கிளில் கம்பம் நகர் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இரவு 9 மணிக்கு மேல் அவர் கம்பம்மெட்டு காலனி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), அவரது நண்பரான 17 வயது சிறுவனும் சுருளிவேலுவிடம் 10 ரூபாயை கொடுத்து 3 பன்ரொட்டி கேட்டனர். அதற்கு அவர் ஒரு பன்ரொட்டி மட்டுமே தருவதாக கூறினார். இதனால் 2 பேரும் இலவசமாக பன்ரொட்டி கேட்டு சுருளிவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மணிகண்டனையும், சிறுவனையும் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சுருளிவேலு அப்பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். ஆனால் சுருளிவேலுவை எப்படியாவது தாக்க வேண்டும் என்று மணிகண்டனும், சிறுவனும் திட்டம் போட்டுள்ளனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் அப்பகுதியில் மழை பெய்தது. மேலும் அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட 2 பேரும் சேர்ந்து, அப்பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுருளிவேலுவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த சுருளிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே அப்பகுதியில் மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது அங்கு சுருளிவேல் இறந்துகிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சுருளிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இண்டிகோ விமானத்தில் பூச்சிகள்.. கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் பகிர்ந்த பரபரப்பு ட்வீட்..
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாக்கியவர்கள் தங்களது செருப்பை சம்பவ இடத்தில் விட்டுச்சென்றது தெரியவந்தது. அதனை வைத்து சுருளிவேலுவை கொலை செய்த மணிகண்டனையும், சிறுவனையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலவசமாக ரொட்டி தர மறுத்ததால் வியாபாரியை அடித்துக்கொலை செய்த சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்