தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் கும்பக்கரை அருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல், வட்டக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கும்பக்கரை அருவியில் தண்ணீர்  அதிகரிக்க தொடங்கியது.


Online Rummy: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் சோகம்..! ரூ. 4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி


வாரவிடுமுறையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் நேற்று குளிக்க வந்தனர். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல் அருவியில் ஆர்ப்பரித்த தண்ணரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஆனந்த குளியலிட்டனர். இந்தநிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் அருவிக்கு நீர்வரத்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. சிறிது நேரத்தில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


TN Assembly Session Today LIVE: சட்ட பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது; காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை..!





அப்போது 80-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அருவியில் திடீரென வெள்ளம் மேலும் அதிகரித்தது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 30 பேர், அருவியின் வடக்கு பகுதிக்கு சென்று விட்டனர்.


வழக்குகளை கையாள பயிற்சி அளிப்பதே முதல் வேலை: விலங்கு வதை வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசு நியமித்த எஸ்பி!


மற்றவர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும் அருவியின் மற்றொரு பகுதியில் தவித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாலம் வழியாக வெளியே வருமாறு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் அருவி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண