தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு வரும் நீர் வரத்து இல்லாததால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்தியாவை காப்பாற்ற அனைவரும் தயாராக வேண்டும்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு..!
அருவிக்கு நீர் வரத்து வரும் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் நேற்று மதியம் முதல் நீர்வரத்து திடீரென முற்றிலும் குறைந்துள்ளது. அருவி பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது.
Amritpal Singh: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீசில் சரண்..! பஞ்சாபில் பதற்றம்..!
இந்தியாவை காப்பாற்ற அனைவரும் தயாராக வேண்டும்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு..!
இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அருவியில் நீர் வரத்து அடியோடு நின்றதால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் இன்றி பாறையாக இருக்கும் பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது அருவியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை சார்பில் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்