திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்ல திருமண விழாவில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் பேசிய அவர், “இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை திமுகவினர் விரைந்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதம் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மோசமான நிதிச்சூழல், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.ராமநாதபுரம் குடிநீர் திட்டத்தை 10 மாதங்களில் நிறைவேற்றியவர் கலைஞர் கருணாநிதி. ” என்று பேசியுள்ளார்.