உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டத்தின் சார்பாக போதை மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.


“ஒருங்கிணைவோம்..ஒற்றுமை காப்போம்” - ஜெ. நினைவிடத்தில் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தாரா ஓ.பி.எஸ்.?


தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் 14 வயது முதல் உள்ள சிறியவர்கள் முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் என அனைவரும் பங்கேற்றனர்.


Subramaniyan Swamy: ஸ்டாலின் உறுமினால் பூனைபோல் பம்முவதா...? தமிழக பா.ஜ.க.வை கிண்டலடித்த சுப்பிரமணியன் சுவாமி..!




இந்த போட்டியானது பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து துவங்கி பெரியகுளம்  நகராட்சி அலுவலகம் முன்பு  வரை 9 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.  இந்த போட்டியினை தேனி மாவட்ட இளைஞரணி ஹனிஃபா பாசித் ரகுமான் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த போட்டியினை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.


12 PM Headlines: மதியம் 12 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?


Thiruvannamalai Deepam: நாளை திருவண்ணாமலை மகாதீபம்..! தொடங்கியது சிறப்பு பேருந்துகள், ரயில்கள் சேவை..! அலைமோதும் கூட்டம்


இதில் வடக்கு மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்களுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி பங்கேற்றார். இறுதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு ரொக்க பரிசாக ரூபாய் 10,000, 8,000, 3,000 என வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்று ஒன்பது கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக முடித்த மாரத்தான் வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண