கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவின் கட்டிடக் கதவை இழுத்துப்பூட்டி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஒரு மணி நேர புற நோயாளிகள் பிரிவு புறக்கணிப்பால் நோயாளிகள் அவதியடைந்தனர்.


IPL: அடேங்கப்பா! ஐ.பி.எல்.லில் இனி ஒவ்வொரு சீசனிலும் இத்தனை மேட்சா? ஜெய்ஷா பரபரப்பு பேட்டி


கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான மருத்துவரான அவரை மருத்துவமனைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியது.


TNPSC Group 1 Notification: நடந்து முடிந்த குரூப் 1 தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!


பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு  மருத்துவர்கள் மற்றும்  பயிற்சி மருத்துவர்கள்  இன்று காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை புறக்கணித்தன.  7:30 மணிக்கு புற நோயாளிகள் பிரிவிற்கு முன்பாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிட கதவினை இழுத்துப்பூட்டி அதற்கு முன்பாக அமர்ந்து கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியதோடு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி கோஷம் எழுப்பினர்.


"ரசிகர்களுக்கு கோடி நன்றிகள்! இதைவிட எதுவும் கேட்க முடியாது" : தங்கலான் விக்ரம் நெகிழ்ச்சி


நேற்று சுமார் ஒரு மணி நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவினை மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் ஒரு மணி நேரம் புறக்கணித்ததால்  காலையிலேயே காய்ச்சல் ,தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து பெறுவதற்காக வந்திருந்த பொதுமக்கள் மருத்துவமனை அறைகளிலும், வளாகத்திலும் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.