முகாம் எதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவில்லை என்று இந்த செய்தி மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
Magalir Urimai Thogai Scheme: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பமும் விநியோகம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் யார் உரிமை தொகையை பெறுவதற்கு தகுதியானர்கள் உள்பட பல வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் வெளியிட்டது.
முதல் கட்ட அறிவிப்பு
இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, அண்ணா பிறந்தநாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் 1 கோடியை 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டத்தில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு பெண்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக ரூ.1000 கொடுக்கப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடப்பதாக வாட்சப்களில் போஸ்ட் ஒன்று பரவி வருகிறது. இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்
”தற்போது வாட்ஸ்ஆப்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பான முகாம் நடைபெறுவதாக ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. மேற்கண்ட தகவல் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்தி வடிவில் உள்ளது போன்ற புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் பரப்பப்படுகிறது.
இதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். இது போன்ற முகாம் எதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவில்லை என்று இந்த செய்தி மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் யாரும் இது போன்ற பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”. - என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குஷ்பு ஒலிம்பிக் வீராங்கனை, 4 ஆண்டுக்கு ஒருமுறை கட்சி தாவி செல்வார் - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்